C, Chemistry (இரசாயனவியல்), Glossary

Crystal: பளிங்கு

ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அயன்கள், மூலக்கூறுகள், அல்லது அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் பெரும்பாலும் கரையக்கூடிய திண்மம்.

C, Chemistry (இரசாயனவியல்), Glossary

Covalent bond: பங்கீட்டுவலுப் பிணைப்பு

இலத்திரன்களை இரண்டு அல்லது மேற்பட்ட அனுக்களிடையே பங்கிடுவதன் மூலம் உருவாக்கப்படும் இரசாயனப் பிணைப்பு.

C, Chemistry (இரசாயனவியல்), Glossary

Compound: சேர்வை

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களின் சேர்க்கை. இங்கு பங்குபற்றும் மூலகங்களின் இயல்புகளை விட வேறுபட்ட இயல்புகள் காணப்படும்.

C, Chemistry (இரசாயனவியல்), Glossary

Chlorination: குளோரினேற்றம்

நீரிற்கு அல்லது தூய்மையாக்கப்படும் கழிவு நீரிற்கு கிருமிநீக்கலுக்காக குளோரின் வாயு சேர்க்கப்படும் செயன்முறை. பெரும்பாலான சமயங்களில் வேறு உயிரியல், இரசாயன தேவைகளுக்கு பயன்படும்.