About

சொல்முதலி உங்களை வரவேற்கிறது

solmuthali logo

இது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பரிமாணத்தின் திட்டமாகும். பரிமாணம் ஒரு அறிவியல் வலைப்பூ. புதிய அறிவியல் கட்டுரைகள், இலவச மின்னூல்கள் என்பனவற்றை அங்கே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

சொல்முதலி பற்றியும், பரிமாணம் பற்றியும் மேலும் அறிய – எம்மைப்பற்றி பக்கத்தை பார்க்கவும்.


சொல்முதலியின் பிரிவுகள்

தற்போது பின்வரும் பிரிவுகளில் அருஞ்சொற்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் காணப்படுகின்றன.

சொல்லொன்றை தேடுவது எப்படி?

வலப்பக்கத்தில் இருக்கும் தேடல் பெட்டியில் குறித்த ஆங்கிலச்சொல்லையோ, அல்லது தமிழ்ச்சொல்லையோ தட்டச்சு செய்து ‘என்டர்’ சாவியை அழுத்துவதன் மூலம் தேடலை மேற்கொள்ள முடியும்.

உங்களுக்கு குறித்த சொல் எந்தப் பிரிவில் இருக்கிறது என்று தெரிந்தால், குறித்த பிரிவின் கீழே இருக்கும் சரியான ஆங்கில எழுத்தை கிளிக் செய்வதன் மூலம் அந்த எழுத்தில் இருக்கும் அனைத்து சொற்களையும் பார்வையிடமுடியும்.


புதிதாக சேர்க்கப்பட்ட சொற்கள் கீழே காணப்படுகின்றன.

Advertisements
Glossary, L, Physics (இயற்பியல்)

Law of conservation of energy: திணிவுக்காப்பு விதி

சக்தியானது ஆக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாதது. மாறாக ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாற்றப்படவே முடியும்.

Glossary, L, Physics (இயற்பியல்)

Latent heat of vaporization: ஆவியாதலின் தன்மறை வெப்பம்

வெப்பநிலையில் மாற்றமில்லாது கொதிநிலைப் புள்ளியில் ஓரலகு திணிவுடைய பொருளை அதன் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்ற தேவையான வெப்ப சக்தியின் அளவு.

Glossary, L, Physics (இயற்பியல்)

Latent heat of sublimation: பதங்கமாதலின் தன்மறை வெப்பம்

வெப்பநிலையில் மாற்றமில்லாது ஓரலகு திணிவுடைய பொருளை அதன் திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்ற தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு.

Glossary, L, Physics (இயற்பியல்)

Latent heat of fusion: உருகலின் தன்மறை வெப்பம்

வெப்பநிலையில் மாற்றமில்லாது உருகல் புள்ளியில் ஓரலகு திணிவுடைய பொருளை அதன் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்ற தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு.

Glossary, K, Physics (இயற்பியல்)

Kinetic energy: இயக்க சக்தி

ஒரு உடலினால் அதன் இயக்கத்தின் போது பெறப்படும் சக்தி. இங்கு m ஆனது உடலின் திணிவாகவும் v ஆனது அதன் இயக்க வேகமாகவும் இருப்பின் 1/2 mv2 அதன் இயக்க சக்தியாகும்.

Glossary, I, Physics (இயற்பியல்)

Inertia: சடத்துவத் தன்மை

ஒரு உடலானது அது ஓய்விலிருப்பதை அல்லது சீரான இயக்கத்திலிருப்பதை மாற்ற முயற்சிக்கும் விசைக்கெதிராக காட்டும் எதிர்க்கும் பண்பு.

E, Glossary, Physics (இயற்பியல்)

Escape velocity: தப்பல் வேகம்

ஒரு பொருள் பூமியிலிருந்து எறியப்படும் போது அது புவியீர்ப்பு விசையை மீறி பூமியிலிருந்து விடுபடத் தேவையான உயர் வேகம்.

E, Glossary, Physics (இயற்பியல்)

Electromagnetic induction: மின்காந்தத் தூண்டல்

ஒரு கடத்திச் சுருளுடன் தொடர்பான காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக அக் கடத்திச் சுருளில் மின்னோட்டம் தூண்டப்படும் செயன்முறை.

E, Glossary, Physics (இயற்பியல்)

Electric potential energy: மின்னழுத்த சக்தி

இரு அல்லது மேற்பட்ட ஏற்றங்கள் அருகருகே காணப்படுவதால் உருவாகும் சக்தி. ஏற்றங்களின் நிலை முக்கிய காரணியாகும்.

D, Glossary, Physics (இயற்பியல்)

Decibel: டெசிபல்

ஒலிமட்டத்தின் அலகு. P1, P2 என்பன இரு வலு முதல்களாகவும் P1 ஆனது P2 ஐ விட n டெசிபல்கள் அதிக ஒலிமட்டம் உடையதாகவும் காணப்படின், n = 10 log10 (P1/P2) ஆகும்.

C, Glossary, Physics (இயற்பியல்)

Critical angle: அவதிக்கோணம்

ஓர் அடர்ந்த ஊடகத்திலிருந்து ஐதான ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும் போது அடர்ந்த ஊடகத்திலிருந்து ஒளி தெறிப்படையக்கூடிய உயர் கோணம். அவதிக்கோணத்தை விட படுகோணம் அதிகரிக்கும் போது கதிர் முழு அகத் தெறிப்படையும்.

C, Glossary, Physics (இயற்பியல்)

Coulomb’s law: கூலோமின் விதி

இரு ஏற்றங்களிற்கிடையான விசையானது அவ்வேற்றங்களின் வலிமைக்கு நேர்விகித சமனாகவும் அவ்வேற்றங்களிற்கிடையான தூரத்தின் வர்க்கத்திற்கு நேர்மாறு விகித சமனாகவும் காணப்படும்.

C, Glossary, Physics (இயற்பியல்)

Centripetal force: மையநோக்கு விசை

ஒரு பொருளை வட்டப்பாதையில் தொழிற்பட வைக்கத் தேவையான முக்கிய விசை. இது அப் பொருளின் மீது வட்டப்பாதையின் மையத்தை நோக்கி தொழிற்படும். இவ்விசை mv2/r இற்கு சமனாகும்.

C, Glossary, Physics (இயற்பியல்)

Capacitance: கொள்ளளவு

ஓரலகு அழுத்த வேறுபாட்டில் ஏற்படும் உயர்வின் மூலம் சேமிக்கப்படும் ஏற்றத்தின் அளவு அல்லது சேமிக்கப்படும் ஏற்றத்திற்கும் அழுத்த வேறுபாட்டில் ஏற்படும் உயர்விற்கும் இடையிலான விகிதம்.